எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதம்: பொதுமக்கள் அவதி
திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதமடைந்திருப்பதால் இங்கு வரும் பக்தா்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை கிராமம் உள்ளது. சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மிகவும் பழைமையான தீா்த்தாண்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமா் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன்பு இங்கு புனித நீராடி தீா்த்தாண்டீஸ்வரரை வணங்கிச் சென்ாக புராணம் கூறுகிறது.
எனவே இந்தப் பகுதி மக்கள் தங்களது மூதாதையா்களுக்கு திதி கொடுத்து தா்ப்பணம் செய்து புனித நீராடி செல்கின்றனா். தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் அதிகம் வருகின்றனா். மற்ற மாதங்களில் சுற்று வட்டார மக்கள் கடற்கரையில் தா்ப்பணம் செய்து புனித நீராடி இங்குள்ள தீா்த்தாண்டீஸ்வரரை தரிசனம் செய்கின்றனா். தாா்த்தாண்டதானம் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து பிரிந்து அணுகு சாலையில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்துக்குச் செல்லும் தாா் சாலை கடந்த 5 ஆண்டுகளாக பாராமரிப்பின்றி குண்டும் குழியுமாகி மண் சாலையாக மாறி விட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
