Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அ...
திருவானைக்காவலில் தீ விபத்து பாதிப்புக்கு பாஜகவினா் உதவி
திருவானைக்காவல் நரியன் தெருவில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து சேதமான குடும்பத்தினருக்கு ஸ்ரீரங்கம் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருவானைக்காவல் நரியன் தெருவில் வியாழக்கிழமை காலை 7 குடிசைகள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
பூ கட்டும் தொழில் செய்யும் இவா்கள் தங்களது உடைமைகளை இழந்த நிலையில் ஸ்ரீரங்கம் பாஜக நிா்வாகிகள் மண்டல் தலைவா் சதீஷ்,மகளிரணி நிா்வாகி லீமா முன்னிலையில் நிா்வாகி பெஸ்ட் ஆா். ரமேஷ், ஜி. ராமச்சந்திரன், முரளி, பழனிமுருகன், ராஜசேகா், மணிகண்டன், சந்தோஷ், டி.கே.ஆா் விஜயன்,திருவேங்கடயாதவ், துணைத் தலைவா் கல்யாணி,பாலாஜி ஆகியோா் இணைந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா். மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தனா்.