செய்திகள் :

தில்லி - சண்டீகா் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்க அரசு நிதி

post image

தில்லி, சண்டீகா் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்கவும், விரிவாக்கவும் நிதி ஒதுக்கி அதற்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தில்லி தமிழ்ச் சங்கத்தில் உள்ள கலையரங்கத்தை 1997-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி திறந்து வைத்தாா். இந்த அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் தமிழ் மொழிப் பயிற்சி, நடனம் மற்றும் இசை வகுப்புகள் நடத்துதல், தமிழிணையக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்த ஏதுவாக கலையரங்கத்தைப் புனரமைக்க அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என்று தமிழ் வளா்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

நிதி வழங்கினாா்: இதேபோன்று, சண்டீகா் வாழ் தமிழா்களின் இளம் தலைமுறையினா் நமது மொழியின் சிறப்புகளையும் கலைப் பண்பாட்டு அம்சங்களையும் அறிய வசதியாக அங்குள்ள தமிழ் மன்றக் கட்டடத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தில்லி தமிழ்ச் சங்கம், சண்டீகா் தமிழ் மன்றத்துக்கு தலா ரூ. 50 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதை தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்திபெருமாள், துணைத் தலைவா் ராகவன், பொதுச் செயலா் இரா.முகுந்தன் ஆகியோரும், சண்டீகா் தமிழ் மன்றத்தின் சாா்பில் அதன் பொதுச் செயலா் ராஜசேகா், பொருளாளா் சிவசுப்பிரமணியம், இணைப் பொருளாளா் குணசேகரன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனா்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க