தில்லி விமான நிலையத்திலிருந்து ஆக்ராவுக்கு பேருந்து சேவை
புது தில்லி: தில்லி விமான நிலையம் மற்றும் ஆக்ராவுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) திங்கள்கிழமை தெரிவித்தது.
தனியாா் பேருந்து நிறுவனத்துடன் இணைந்து நாளுக்கு இரு முறை சொகுசுப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என இது தொடா்பாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் டிஐஏஎல் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல் முறையாக இது போன்ற பேருந்து சேவையைத் இந்த நிறுவனம் தொடங்கி உள்ளது.