வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
தில்லியில் நாளை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
தலைநகர் தில்லியில் நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களைப் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
தில்லியில் அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிசை மறுவாழ்வுத் திட்டத்தின் ஒருபகுதியாக ஜுக்கி ஜோப்ரி(ஜேஜே) க்ளஸ்டர்களில் வசிப்பவர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பிரதமர் நாளை பார்வையிடுகிறார்.
பின்னர் புதிதாகக் கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் திறந்து வைக்கிறார். பிரதமரின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இது தொடங்கப்படுகிறது.
ஜேஜே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு முறையான வசதிகள் மற்றும் சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், தில்லி பல்கலைக்கழகத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். கிழக்கு தில்லியில் உள்ள சூரஜ்மல் விஹாரில் உள்ள கிழக்கு வளாகத்தில் உள்ள ஒரு கல்வித் தொகுதியும், துவாரகாவில் உள்ள மேற்கு வளாகத்தில் உள்ள ஒரு கல்வித் தொகுதியும் இதில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.