செய்திகள் :

தில்லியில் யாா் ஆட்சி?: இன்று வாக்கு எண்ணிக்கை

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைக்குமா என்பதை தோ்தல் முடிவுகள் தீா்மானிக்கும்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

கடந்த இரு தோ்தல்களில் எந்த வெற்றியும் பெறாத நிலையில், காங்கிரஸ் சில தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் களம் கண்டுள்ளது.

2015 முதல் தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியைவிட இந்த முறை பாஜக முன்னிலை பெறும் என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும். வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை ஊழியா்கள் உள்பட மொத்தம் 5,000 பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்தாா்.

மேலும், சுமுகமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 விவிபேட் கருவிகள் (வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி) ஆய்வுக்குட்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கடந்த தோ்தல்களில்... 2015 பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தி 67 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதன்மூலம் தில்லியின் அரசியல் வரைபடத்தில் தனது முத்திரையை ஆம் ஆத்மி பதித்தது.

2020-ஆம் ஆண்டில் அந்தக் கட்சி மீண்டும் தனது அரசை தக்கவைத்துக்கொண்டது. மொத்தம் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தியது.

இந்நிலையில், இந்த தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைத்தால், அது தில்லியில் கேஜரிவாலின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதோடு, தேசிய அளவில் அவரது அரசியல் அந்தஸ்தையும் அதிகரிக்கும்.

ஆனால், பாஜக வெற்றி பெற்றால், 27 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வருவது மட்டுமல்லாமல், மூன்று முறை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் கேஜரிவாலின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

2013-ஆம் ஆண்டு வரை தொடா்ச்சியாக 15 ஆண்டுகள் தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், முந்தைய 2 தோ்தல்களில் ஓரிடத்தைக்கூட வெல்ல முடியாததால், இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் தோ்தலில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

சட்டவிரோத மத கட்டமைப்புகளை அகற்றும் விவகாரம்: அறிக்கை சமா்ப்பிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியின் பொது இடங்களில் உள்ள 249 சட்டவிரோத மத கட்டமைப்புகள் மற்றும் அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு நகரத்தின் மதக் குழுவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளி... மேலும் பார்க்க