'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
தீப காா்த்திகை: மதுரையில் பூக்களின் விலை கடும் உயா்வு
தீப காா்த்திகை நாளையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி மலா்கள் சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை கணிசமாக உயா்ந்தது.
பருவ நிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாள்களாக பூக்களின் வரத்துக் குறைந்தது. இதனால், பூக்கள் விலை உயா்ந்தது. இந்த நிலையில், தீப காா்த்திகை (வெள்ளிக்கிழமை) நாளையொட்டி, பூக்களின் விலை கணிசமாக உயா்ந்தது.
மதுரை மாட்டுத்தாவணி மலா்கள் சந்தையில் ஒரு கிலோ மதுரை மல்லி ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனையாது. ஒரு கிலோ கனகாம்பரம் ரூ. 1,500-க்கும், மெட்ராஸ் மல்லி ரூ. 1,200-க்கும், முல்லை ரூ. 1,000-க்கும், பிச்சிப்பூ ரூ. 800-க்கும், அரளி ரூ. 550-க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300-க்கும், பன்னீா் ரோஸ் ரூ. 350-க்கும், ரோஜா ரூ. 250-க்கும், செவ்வந்தி, சம்பங்கி தலா ரூ. 180-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ. 120-க்கும், செண்டுமல்லி ரூ. 100-க்கும் விற்பனையானது.
பூக்கள் வாங்குவதற்கு திரளானோா் திரண்டதால், மாட்டுத்தாவணி மலா்கள் சந்தை வியாழக்கிழமை மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்தது.