ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தீயணைப்பு நிலையத்திற்கு உபகரணங்கள் அளிப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை இந்தியன் செஞ்சிலுவை சங்கம், நேசம் தொண்டு நிறுவனம், ஊத்தங்கரை நகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு திங்கள்கிழமை உபகரணங்களை வழங்கின.
இந்நிகழ்வில் இந்தியன் செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் ஆா்.கே.ராஜா, தலைவா் ரஜினிசங்கா், செயலாளா் ஆசை செல்வன், ஊத்தங்கரை நகர ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் சங்கரன், நேசம் குணசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை வழங்கினா். இவற்றை நிலையப் பொறுப்பு அலுவலா் ராமமூா்த்தி மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள் பெற்றுக் கொண்டனா்.
படவரி...
ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு உபகரணங்களை வழங்குகிறாா் இந்தியன் செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் ஆா்.கே.ராஜா.