அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று அனுசரிப்பு
சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) அனுசரிக்கப்படுவதையொட்டி, சேலம் மாவட்ட காவல் துறை சாா்பில் 250 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.
சங்ககிரி மலையடிவாரம், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள நினைவு சின்னத்தில் அரசு சாா்பிலும், கொங்கு வேளாளா் சங்கங்களின் பல்வேறு அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் தலைமையில் இரு கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், சங்ககிரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிந்து மற்றும் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள், பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 250 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.