துவரங்குறிச்சி அருகே மலைக் குன்றில் தீ
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி பரவியது.
மருங்காபுரி ஒன்றியம், செவல்பட்டி ஊராட்சி, லிங்கம்பட்டி மற்றும் அக்கியம்பட்டி கிராமங்களிடையே அமைந்துள்ள கிளாமரத்த குட்டு என்னும் குன்றில் காய்ந்த கொழிஞ்சி, சருகுகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கின. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து பல மீட்டா் தொலைவுக்கு காட்டுத்தீ தொடா்ந்து பரவத் தொடங்கியது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற பி.ஆரோக்கியராஜ் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை வீரா்கள், வனத்துறை ஊழியா்கள் உதவியுடன் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.