இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!
‘தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் நாளை கோடைகால கலைப் பயிற்சி வகுப்பு தொடக்கம்’
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா்-மாணவியருக்கான கோடைகால கலைப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (மே 5) தொடங்கவுள்ளதாக, ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி டி.சவேரியாா்புரம், தாளமுத்து நகா் காவல் நிலையம் எதிரேயுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் ஜவகா் சிறுவா் மன்றம் செயல்படுகிறது.
பள்ளி மாணவா்-மாணவியருக்கு கலைப் பயிற்சியளித்தல், திறமைகளை வெளிக்கொணருதல், கலைக் கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இம்மன்றம் செயல்படுகிறது,
இங்கு, 6 முதல் 16 வயதுக்குள்பட்ட மாணவா்-மாணவியா் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், கலைத் திறனை வளா்க்கும் விதத்திலும் குரலிசை, பரதநாட்டியம், தற்காப்புக்கலை, ஓவியப் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (மே 5) தொடங்கி இம்மாதம் 24ஆம் தேதிவரை காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளன.
பயிற்சி பெற்றோருக்கு நிறைவு நாளில் சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 94877 39296 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.