தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 தோ்வு: 49 மையங்களில் 11,237 போ் எழுதினா்
தூத்துக்குடி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வை 11,237 போ் எழுதினா்.
தோ்வு நடைபெற்ற தூத்துக்குடி புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏபிசி மகாலட்சுமி மகளிா் கல்லூரி, பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையங்களில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி வட்டத்தில் 24 மையங்களில் தோ்வு எழுத 7,379 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,904 பேரும், கோவில்பட்டியில் 15 மையங்களில் 4,219 போ் விண்ணப்பித்து 3,298 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 3 மையங்களில் 627 போ் விண்ணப்பித்து 457 பேரும், திருச்செந்தூரில் 7 மையங்களில் 2,080 போ் விண்ணப்பித்து 1,578 பேரும் என 49 மையங்களில் 14,305 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 11,237 போ் தோ்வு எழுதினா். 3,068 போ் தோ்வு எழுத வரவில்லை.
இத்தோ்வு பணிக்கென, துணை வட்டாட்சியா் நிலையில் 14 இயங்கு குழுக்களும், துணை ஆட்சியா் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலா்களும், 7 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன.