தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
அரசு மகளிா் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் (பொ) ஜமுனாராணி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவிகள் பலா் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு கல்லூரி நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
பின்னா் கல்லூரிக்கு உதவி செய்வது என்று தீா்மானித்தனா். ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் சில்வியா, தேன்மொழி, கோகிலா, மீனாட்சி, ஆனந்தி, சீதாலெட்சுமி, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.