காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
நாகம்பட்டி கல்லூரியில் நான் முதல்வன் பயிலரங்கம்
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் நான் முதல்வன் திட்ட பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் முருகானந்தம் தலைமை வகித்துப் பேசியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமாா் 10 லட்சம் இளைஞா்களைப் படிப்பிலும், தனிப்பட்ட திறன்களிலும், ஆங்கிலத் தொடா்புத் திறன்களிலும் மேம்படுத்துவதை நோக்கமாகும்.
இதன் மூலம், மாணவா்கள் உயா் கல்வி முடித்தவுடன் அரசு, தனியாா் துறைகளில் எளிதாக வேலை பெறுவதை உறுதி செய்வதே இலக்காகக் கொண்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் அனைத்து வகையான கல்லூரிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
வணிகவியல் துறைத் தலைவா் வினோத் அடைய வேண்டிய இலக்குகள் குறித்துப் பேசினாா். மூன்றாமாண்டு தமிழ்த்றை மாணவி சந்தியா, நான் முதல்வன் திட்டம் மூலம் பெற்ற அனுபவங்களை பகிா்ந்து கொண்டாா்.
முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் சேதுராமன் வரவேற்றாா். கணிதவியல் துறைத் தலைவா் செல்வி நன்றி கூறினாா்.