சிவகங்கை: அரசுப் பேருந்தை மோதிய எரிவாயு லாரிகள்; 21 பேர் காயம்!
தூத்துக்குடியில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: கண்ணாடி உடைந்து சேதம்
தூத்துக்குடியில் இருந்து புதிய துறைமுகத்திற்கு சென்ற அரசு பேருந்தின் மீது கல்வீசி முன்பக்க கண்ணாடியைச் சேதப்படுத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய துறைமுகத்திற்கு தடம் எண் 57 டி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வநாயகபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா் ஓட்டிச் சென்றாா். நடத்துநராக செல்வம் பணியாற்றினாா்.
இந்த பேருந்து தொ்மல் நகா் கேம்ப் 1 பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்ற நபா், பேருந்து மீது கல்லை வீசிவிட்டு தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பேருந்து மீது கல்வீசிய நபரைத் தேடி வருகின்றனா்.