மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே
தூத்துக்குடியில் சாலை மறியல்: 248 போ் கைது
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 248 போ் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சாா்பில், ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில் அம்பேத்கா் சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலருமான கலைஉடையாா் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சிவன், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ஜீவானந்தம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலா் ஜான்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட 154 பெண்கள் உள்ளிட்ட 248 பேரை போலீஸாா் கைது செய்தனா்.