அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
தூத்துக்குடியில் சாலையை சீரமைத்த காவல்துறையினா்
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சாலையை சீரமைத்த காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டினா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள தூத்துக்குடி - திருச்செந்தூா் பிரதான சாலை அம்மன் கோயில் முன்பு மழையால் பாதிக்கப்பட்டு மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூா் செல்லும் பக்தா்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
இதையடுத்து பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு முத்தையாபுரம் காவல் துறையினா் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்தனா். இதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினா்.