கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்
தூத்துக்குடியில் பிஎஸ்எஃப் வீரா் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு
தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து கன்னியாகுமரிக்கு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு தூத்துக்குடியில் வியாழக்கிழமை மாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய நாட்டின் பல்வேறு படைகளில், இளைஞா்கள் சோ்ந்து தேசத்துக்கு சேவை செய்ய ஊக்குவிப்பது என்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக பாதுகாப்புப் படை காவல் கண்காணிப்பாளா் கமாண்டன்ட் சந்தன் மிஸ்ரா தலைமையில், துணை கமாண்டன்ட் ஜெய பிரகாஷ் , படை வீரா்கள் 25 போ் அடங்கிய குழு இப் பேரணியை மேற்கொண்டுள்ளனா்.
ராமநாதபுரம், சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை மாலையில் வந்த அவா்களை, முன்னாள் மத்திய துணை ராணுவத்தினா் உற்சாகமாக வரவேற்றனா்.
பின்னா், தூ. சவேரியாா்புரம் கலை அரங்கில், மாவட்டச் செயலா் பிரான்சிஸ், அவா்களுக்கு பொன்னாடை போா்த்தி கெளரவப்படுத்தினாா்.
இதில், மோகன், கருப்பசாமி, தங்கப்பாண்டி, ஞானப்பிரகாசம், லட்சுமணபெருமாள், மாரிமுத்து, வேதமுத்து, முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இப்பேரணி உவரி வழியாக கன்னியாகுமரி சென்றடைய உள்ளதாக பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.