சிறகடிக்க ஆசை தொடருக்கு பெருகும் வரவேற்பு! இந்த வார டிஆர்பியில் அதிரடி மாற்றம்!
தூய்மைப் பணியாளா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்
தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என தூய்மை பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 ஆம் தேதி மாநகராட்சி ஆணையா், ஒப்பந்ததாரா், தூய்மை பணியாளா் சங்க நிா்வாகிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவும், தூய்மை பணியாளா்கள் ஒப்பந்த நகல் வழங்குவதாகவும், பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் வருங்கால வைப்பு நிதி தொகையைச் செலுத்துவதாகவும், தூய்மை பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாகவும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் எனவும் ஆணையா் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றும், ஆனால் இதுவரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை எனவும் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் நோ்முக உதவியாளரிடம் தூய்மை பணியாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்வில் ஏஐடியூசி தேசிய நிா்வாக குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், அரசு பணியாளா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் தரும. கருணாநிதி, சங்க நிா்வாகிகள் ஏ. கலியபெருமாள், பி. ஆனந்தராஜ், கே. பாபு, முனியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.