செய்திகள் :

''தென்னிந்திய படங்களில் எனக்கு வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லையா?''- ஜெனிலியா சொல்வதென்ன ?

post image

ஆமீர் கான், ஜெனிலியா நடித்திருக்கிற 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி ப்ரோமோஷனுக்காக பல்வேறு நேர்காணல்களில் ஆமீர் கானும், ஜெனிலியாவும் பங்கேற்று வருகின்றனர்.

Sitaare Zameen Par
Sitaare Zameen Par

அப்படி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜெனிலியாவிடம் 'தென்னிந்திய படங்களில் உங்களுக்கு வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லைதானே?' எனக் கேள்வி எழுப்பினர். அதனை மறுத்து ஜெனிலியா கொடுத்தப் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நேர்காணலில் ஜெனிலியா, "நிச்சயமாக அப்படி கிடையாது. தென்னிந்தியப் படங்களில் எனக்கு எப்போதும் வலுவான நல்ல கதாபாத்திரங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கு எனக்கு அமைந்த வாய்ப்புகளுக்காக நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஹைதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரினி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் என்னுடைய கதாபாத்திரங்கள் வழியாகத் தான் என்னை தென்னிந்திய மக்கள் அடையாளப்படுத்தி நினைவில் வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் செய்யும் செயலை நேர்மையாக செய்யும்போது அது உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

Genilia - Sitaare Zameen Par
Genilia - Sitaare Zameen Par

நான் நேர்மையாக ப்ரியத்துடன் என்னுடைய வேலைகளைச் செய்தேன். நான் ராஜமெளலி சாருடன் அங்கு பணிபுரிந்திருக்கிறேன். நான் அங்கு ஷங்கர் சாருடன் பணிபுரிந்திருக்கிறேன்.

சொல்லப்போனால், ஷங்கர் சாரின் படத்தின் மூலமாகத் தான் நான் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டேன். நான் அங்கு பெரிய நடிகர்களுடனும், இயக்குநர்களுடனும் பணிபுரிந்திருக்கிறேன்." எனக் கூறினார்.

Suriya: சூர்யாவின் 50-வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்... நாளை 'சூர்யா 45' டைட்டில்!

சூர்யா, வெங்கி அட்லூரியின் கூட்டணியில் உருவாகி வரும் 'சூர்யா 46' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சூர்யாவின் முந்தைய படமான 'சூர்யா 45' படத்தின் அப்டேட் ஒன்று நாளை வெளி... மேலும் பார்க்க

Kubera: "பணக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே.." - குபேரா கதை குறித்து இயக்குநர் சேகர் கம்முலா

தனுஷின் நடிப்பில் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர்நடித்துள்ளனர். இப்படம்... மேலும் பார்க்க

Thug Life: ''அதனால் எங்களுக்கு 30 கோடி நஷ்டம்!" - ராஜ்கமல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தகவல்!

கடந்த ஜூன் 5-ம் தேதி கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவைத் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தமிழிலிருந்துதான்... மேலும் பார்க்க

Vairamuthu: "பழி என்மீதே வருகிறது; நான் என்ன செய்ய..." - எதைக் கூறுகிறார் வைரமுத்து?

கவிஞர் வைரமுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு, தான் எழுதிய பாடல்களின் பல்லவிகள் பலவற்றை மரியாதைக்குக்கூட தன்னிடம் கேட்காமல் திரைப்பட தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த... மேலும் பார்க்க

Keerthy Pandiyan: நடிகை கீர்த்தி பாண்டியனின் ரீசன்ட் க்ளிக்ஸ் | Photo Album

Keerthy Pandiyan | கீர்த்தி பாண்டியன்Keerthy Pandiyan | கீர்த்தி பாண்டியன்Keerthy Pandiyan | கீர்த்தி பாண்டியன்Keerthy Pandiyan | கீர்த்தி பாண்டியன்Keerthy Pandiyan | கீர்த்தி பாண்டியன்Keerthy Pandiya... மேலும் பார்க்க