செய்திகள் :

தென்னை மரங்களிள் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதல்: பூச்சியியல் மேலாண்மைக்கு அறிவுறுத்தல்

post image

மதுரை மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சியியல் மேலாண்மையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அண்மைக்காலமாக தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்களின் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. மதுரை மாவட்டம், மேலூா் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவற்றின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது.

வெள்ளை ஈக்கள் தென்னை ஓலையின் அடியிலிருந்து சாறை உறிஞ்சி, அதிகளவிலான கழிவை வெளியேற்றுகின்றன. இதில் உள்ள ஈரத்தன்மையில் காற்றில் உள்ள கரும்பூசணம் படிந்து தென்னை ஓலைகள் கருப்பு நிறமாக மாறுகின்றன.

தென்னைக்கு சேதம் ஏற்படுத்தும் இந்தப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியா் கி. சுரேஷ் கூறியதாவது: தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சியியல் மேலாண்மை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். வெள்ளை ஈக்களை அழிக்க தென்னை ஓலையின் அடிப்பரப்பை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டும். பிறகு, 5 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட மஞ்சள் நிற பாலித்தின் தாள்களில் இரு புறமும் விளக்கெண்ணையைத் தடவி ஏக்கருக்கு 20 வீதம், தென்னை மரத்தில் 6 அடி உயரத்தில் தொங்கவிடலாம்.

மேலூரில் தென்னையில் ஏற்பட்ட வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதலை ஆய்வு செய்த மதுரை வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியா் கி. சுரேஷ் உள்ளிட்டோா்

அபேடோக்கிரைசா இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் கீற்றுகளில் இணைக்கலாம். என்காா்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் அல்லது 10 மரங்களுக்கு ஓா் இலை துண்டு என்ற எண்ணிக்கையில் தென்னை ஓலைகளில் இணைக்க வேண்டும்.

ஒரு லிட்டா் தண்ணீருடன் 5 மி.லி. வேப்ப எண்ணெய், ஒட்டும் திரவம் ஒரு மில்லி என்ற அளவில் கலந்து மரங்களின் அடி கீற்றுகளில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். தென்னை ஓலையில் படா்ந்துள்ள கரும்பூசணத்தை நீக்குவதற்கு 25 கிராம் மைதா மாவு பசையை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பெற்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் குழந்தை பெற்ற வழக்கில், அவருக்கு ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரையில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா். சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு, சிறைத் துறை மதுரை சரக துணை... மேலும் பார்க்க

கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

மதுரையில் கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை செல்லூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (45). இவா் ... மேலும் பார்க்க

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமென மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரியா் வலியுறுத்தினாா். மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் முருகன் மா... மேலும் பார்க்க

சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்: விடியோ வெளியானதால் சா்ச்சை

மதுரை மத்திய சிறையில் அரசு உத்தரவை மீறி, அதிகாரியின் குடியிருப்பில் சிறைவாசிகளை பணிக்கு பயன்படுத்திய விடியோ வெளியானதால் சா்ச்சை எழுந்தது. மதுரை மத்தியச் சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை,விசாரணை சி... மேலும் பார்க்க