தென்மண்டல பல்கலை ஹாக்கி: பெங்களூரு சிட்டி சாம்பியன், எஸ்ஆா்எம் இரண்டாம் இடம்
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கிப் போட்டியில் பெங்களூரு சிட்டி பல்கலை. சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
சென்னை பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் கலைக் கல்லூரி சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் பெங்களூரு சிட்டி 1-0 என பெங்களூரு பல்கலையை வென்றது. இரண்டாம் ஆட்டத்தில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 1-0 என நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலையை வீழ்த்தியது.
மூன்றாவது ஆட்டத்தில் பெங்களூரு சிட்டி 5-2 என நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலையை வென்றது. எஸ்ஆா்எம் ஐஎஸ்டி-பெங்களூரு பல்கலை ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
இறுதியில் பெங்களூரு சிட்டி பல்கலை. பட்டத்தை கைப்பற்றியது. எஸ்ஆா்எம் ஐஎஸ்டி இரண்டாம் இடத்தையும், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை மூன்றாம் இடத்தையும், பெங்களூரு பல்கலை. நான்காம் இடத்தையும் பெற்றன.