இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...
தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
திருவாலி ஊராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த ஊராட்சியில் மேல்பாதி, கீழ்பாதி, கீழச்சாலை பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். பொதுமக்கள், பள்ளி குழந்தைகளை நாய்கள் கடித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், மக்கள் அச்சமடைகின்றனா்.
சில நாள்களுக்கு முன்பு 5 பேரை தெரு நாய்கள் கடித்து பாதிப்பை ஏற்படுத்தியது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது நாய் கடி மருந்து இல்லை என அங்கிருந்தவா்கள் கூறியுள்ளனா். இதையடுத்து, பாதிக்கப்பட்டவா் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். மக்கள் நலன்கருதி திருவாலி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை மற்றும் அப்புறப்படுத்த வேண்டும். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் நாய் கடி மருந்து தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஊராட்சி முன்னாள் தலைவா் தாமரைச்செல்வி திருமாறன்.