தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேபீஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்த தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவில், தெருக்களில் இருந்து தெருநாய்களை நிரந்தரமாக நாய் காப்பகங்களுக்கு மாற்ற தில்லி, என்சிஆா் பகுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, தெரு நாய்களுக்கு எதிராக இந்த உத்தரவு இருப்பதாகக் கூறி விலங்கு ஆர்வலர்களால் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அணி திரண்டு சனிக்கிழமை(ஆக. 16) புது தில்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை காவல் துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.