தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்...
`தேசம் விட்டு தேசம் வீசிய காதல் மழை' - மாப்பிள்ளை -தேனி; பொண்ணு - பிரான்ஸ்; பலே எதிர்காலத் திட்டம்
தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டியைச் சேர்ந்த போஜன், காளியம்மாள் தம்பதியின் மகன் கலைராஜன் 31.
இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் விமான நிலையத்தில் தொலைத் தொடர்பு பிரிவில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியனை 31 என்ற பெண்ணுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் மணமகனின் சொந்த ஊரான தேனி முத்துத்தேவன்பட்டியில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்த பேசிய கலைராஜன், கடந்த 2013-ல் செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் முதல்முறையாக மரியனை சந்தித்தேன். இதையடுத்து மேற்படிப்புக்காக 2017-ல் பிரான்ஸ் சென்றிருந்தேன். அப்போது மீண்டும் மரியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து சில ஆண்டுகளாக நண்பர்களாகப் பழகி வந்தோம். அந்தப் பழக்கம் காதலாக மாறியது. சுற்றுச்சூழல் ஆர்வலரான மரியன் பிரான்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
எங்கள் காதல் குறித்து இருவீட்டாரிடம் தெரிவித்தோம். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் பிரான்ஸில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். பின் எனது சொந்த ஊரில் திருமணம் நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் விரும்புவதாக மரியனிடம் தெரிவித்தேன். அவரும் விரும்பம் தெரிவித்தவுடன், வீரபாண்டி கோயில் அருகே தனியார் மண்டபத்தில் இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டோம்.
மரியன் தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு மீது தீவிர காதல் கொண்டவர். தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் தேனி மாவட்டத்திற்குத் திரும்பி வந்து இருவரும் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.