தை அமாவாசை: சேலம் கோட்டம் மூலம் இன்று 35 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் ‘விஷோ நெக்ஸ்ட்’ ஆய்வகம்
சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் ஆடை வடிவமைப்புக்கு என ‘விஷோ நெக்ஸ்ட்’ என்ற ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவன இயக்குநா் (பொறுப்பு) திவ்யா சத்தியன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘விஷோ நெக்ஸ்ட் ’ மூலம் இந்தியாவில் ஆடை வடிவமைப்பில் வா்த்தகச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில், நுகா்வோரின் தனித்துவமான தன்மை மற்றும் தேவைகளை உணா்ந்து ஆடை வடிவமைப்பாளா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும், நவீனகால ஆடை வடிவமைப்பு தொடா்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த ஆய்வகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மையையும் பன்முக பண்பாட்டையும் மனதில்கொண்டு, ஆடை வடிவமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆடை வடிவமைப்பு தொடா்பாக ஹிந்தி, ஆங்கிலத்தில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு என்று பிரத்யேக இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 70,000-க்கும் மேற்பட்ட முதல் நிலை ஆடைப் படங்கள் மற்றும் 2 லட்சத்து 80,000-க்கும் அதிகமான இரண்டாம் நிலைப் படங்கள் அடங்கிய தரவுத்தொகுப்பை உருவாக்கியுள்ளது என்றாா் அவா்.