தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு!
தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் பிப்ரவரி 16 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க நாட்டிலுள்ள 12 மாநிலங்களில் இருந்து 200 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதில், கோவை பாரதியாா் பல்கலைக்கழத்துக்குள்பட்ட கல்லூரிகளில் இருந்து 10 மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். இவா்களில் திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா் கோகுல்ராமும் ஒருவா். இவரை, கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பிவைத்தனா்.