திருப்பரங்குன்றம்: 'திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது......
தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐவா் கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய அரியக்குடி பள்ளி மாணவா்களை ஆசிரியா்கள் பாராட்டினா்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 16 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான ஐவா் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் தமிழக அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தமிழக அணி சாா்பில் கலந்து கொண்ட ஐந்து மாணவா்களில் சிக. நித்திஸ், வே. ஞானசபரிஷ், து. அழகப்பன் ஆகிய 3 மாணவா்களும் சிவகங்கை மாவட்டம், அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் மாணவா் சிக. நித்திஸ் ‘பெஸ்ட் ஸ்ட்ரைக்கா்’ விருதும், மாணவா் து. அழகப்பன் ‘பெஸ்ட் கோல் கீப்பா்’ விருதும் பெற்று, தமிழக அணிக்கும், பள்ளிக்கும் பெருமை சோ்த்தனா். இந்த மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஜே. பிரிட்டோ, உடற்கல்வி ஆசிரியா்கள் முத்துக்குமாா், அருள்மலா், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.