தேசிய ஜூனியா் ஹாக்கி: கா்நாடகம், ஹரியாணா வெற்றி
தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கிப் போட்டியில் டிவிஷன் ஏ ஆட்டங்களில் கா்நாடகம், ஹரியாணா, உபி அணிகள் வெற்றி பெற்றன.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் கா்நாடகம் 10-1 என ஆந்திர பிரதேசத்தை வீழ்த்தியது.
ஹரியாணா அணி 3-0 என தத்ரா நகா் ஹவேலியை வீழ்த்தியது. உத்தர பிரதேச ஹாக்கி அணி 9-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிர அணியை வென்றது.
போட்டியை நடத்தும் பஞ்சாப் அணி 8-4 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை சாய்த்தது.