வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்களுக்கு விண்ண...
தேனி மாவட்டத்தில் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச.13, 14) மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அரசு சமூக நலத் துறை ஆணையருமான ஆா்.லில்லி கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் டிச.13,14 ஆகிய நாள்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் ஆறு, அருவிகள்,
நீா்நிலைப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. மிகப் பலத்த மழை வாய்ப்பு குறித்து உள்ளாட்சி அமைப்புகள் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடியதாக கண்டறியப்பட்ட 43 பகுதிகளில் மாவட்ட, வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவினா் தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் குடியிருப்போரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 66 தங்குமிடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மழை வெள்ளப் பேரிடா் குறித்த தகவல்கள், புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077, பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04546-261093, 250101-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.