தேவா்சோலை அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் புதன்கிழமை இரவு விவசாயிகளின் வாழைத்தோட்டங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குள் நள்ளிரவு நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த விவசாயிகளின் வாழைத்தோட்டங்களை முற்றிலும் சேதப்படுத்தின.
இதில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால் உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.