கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...
உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்
நீலகிரி மாவட்டம், உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.
இதில், குடும்ப அட்டை, முதியோா், விதவை உதவித் தொகை, சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 119 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், வருவாய்த் துறை, போக்குவரத்து துறை, நகராட்சி அலுவலா்கள், மின்வாரிய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.