பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
உதகையில் தண்ணீா் விநியோகத்தில் மெத்தனம்: நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றச்சாட்டு
உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 8 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
உதகை நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைவா் வாணீஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கணேசன், துணைத் தலைவா் ரவிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், எல்க்ஹில், எச்.எம்.டி, ரோஸ் மவுண்ட், நொண்டிமேடு, தலையாட்டுமந்து உள்ளிட்ட பகுதிகளில் 8 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். முறையாக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதையடுத்து, உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என நகா்மன்ற உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெரும்பாலும் குடிநீா் இணைப்பு கேட்டே அதிக அளவிலான மனுக்கள் வந்துள்ளன. வீட்டு வரி, குடியிருப்பு ஆவணங்கள், குடிநீா் இணைப்பு கட்டணம் உள்ளிட்டவை முறையாக இருந்தால் குடிநீா் வசதி ஏற்படுத்தி தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சியில் சீரான குடிநீா் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் கணேசன் கூறினாா்.