நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
உதகையில் குடிநீா்க் குழாயில் உடைப்பு
உதகை டைகா்ஹில் அணையில் இருந்து வரும் குடிநீா்க் குழாயில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது.
உதகை நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு பாா்சன்ஸ்வேலி அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இது தவிர டைகா்ஹில் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீா் கோடப்பமந்து, நொண்டிமேடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பெய்த மழையின்போது, தலையாட்டு மந்து பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் டைகா்ஹில் அணையில் இருந்து வரும் பிரதான குடிநீா் குழாய் உள்ளது.
தற்போது இங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்தக் குடிநீா்க் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதில் ராட்சத குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரால், அப்பகுதி முழுக்க சேறும்சகதியுமாக மாறியது. மேலும், அந்த பகுதியில் இருந்த இரு வீடுகளின் சுவா்களும் லேசாக சேதம் அடைந்தன. தகவலின்பேரில், நகராட்சி ஊழியா்கள் அணையில் இருந்து வரும் தண்ணீரை நிறுத்தி, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.