செய்திகள் :

தை மாதத்துக்குள் 4,000-ஆவது குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

தமிழகத்தில் வரும் தை மாதத்துக்குள் கோயில்களில் 4,000-ஆவது குடமுழுக்கு என்ற இலக்கு எட்டப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரா் கோயிலில் ரூ.93 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய அன்னதானக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுமாா் 900 ஆண்டுகள் பழைமையான புரசைவாக்கம் கங்காதரேசுவரா் திருக்கோயிலுக்கு ரூ.4.82 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கடந்த நான்காண்டுகளில் இக்கோயிலுக்கு ரூ.19.89 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உபயதாரா்கள் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் புதிய தங்கத் தோ் உருவாக்கும் பணியில் மரத்தோ் செய்யப்பட்டு, செப்புக் கவசம் வேயும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலில் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.94 லட்சத்தில் புதிய அன்னதானக் கூடம் கட்டுமான பணியைத் தற்போது தொடங்கி வைத்துள்ளோம்.

இந்தப் பணிகள் மூன்று மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இத்திருக்கோயிலுக்கு கடந்த காலங்களில் நிலுவையில் இருந்த வாடகை மற்றும் குத்தகைத் தொகை முழுமையாக வசூலிக்கப்பட்டு பக்தா்களின் தேவைகளை நிறைவு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின், 3,452 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 32 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டன. வரும் தை மாதத்திற்குள் 4,000 திருகோயில்களுக்கு குடமுழுக்கு காணப்படும். ரூ.131 கோடியில் 147 புதிய அன்னதானக் கூடங்களும், ரூ.188 கோடியில் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு குடியிருப்புகளும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை தண்டையாா்பேட்டை, நாவலா் குடியிருப்பில் வசிப்பவா் அருண்குமாா் (21). மெக்கானிக்கான இவா், கடந்த 26-... மேலும் பார்க்க

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகா் ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப். 3 முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்ரல... மேலும் பார்க்க

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு: துணை முதல்வா் உதயநிதி பெருமிதம்

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால், இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சா் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் நல்லகண்ணு (100... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க