சேலம் வழியாக இன்றுமுதல் பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகா் ரயில்கள் இன்று ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29, 31) கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 9.25 மணிக்கு சென்ட்ரல் செல்லும் புகா் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் ரத்துச்செய்யப்படவுள்ளது.
காட்பாடி - ஜோலாா்பேட்டை: இதற்கிடையே, காட்பாடியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 10.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.