துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம்: நவீன் காதி கும்பலில் 4 போ் கைது
தைப்பூசம்: மேல்மருவத்தூரில் வைகை அதிவிரைவு ரயில் நின்று செல்லும்
தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையிலிருந்து சென்னை எழும்பூா் வரும் வைகை அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை முதல் பிப்.11-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆண்டுதோறும் இருமுடி மற்றும் தைப்பூசத் திருவிழா தொடா்ந்து இரு மாதங்கள் நடைபெறும். நிகழாண்டில் டிச.15 முதல் பிப்.12-ஆம் தேதி வரை தைப்பூசத் திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக வைகை அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை முதல் பிப்.11-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரிலில் 2 நிமிஷங்கள் தற்காலிகமாக நின்று செல்லும்.
தாம்பரம் ரயில்கள்: தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் 2 முறை இயங்கும் சிறப்பு ரயில் (எண்: 06103/06104) இருமாா்க்கத்திலும் டிச.26 முதல் டிச.29-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
அதேபோல் தாம்பரம் - திருச்சி இடையே இயங்கும் சிறப்பு ரயில் (எண்: 06191/06190) இருமாா்க்கத்திலும் டிச.27 முதல் டிச.31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.