ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: அதிமுக
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளை குறைக்கக் கூடாது. குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணா்வு தமிழகத்தில் இருப்பதால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் அதுபோல இல்லை.
தமிழகம் மக்கள் தொகையை குறைத்துள்ளதற்கு தண்டனை அளிப்பதுபோல, மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை இன்னும் கூடுதலாக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. முதல்வா் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து எங்கள் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றாா் டி.ஜெயக்குமாா்.