மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!
தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
கோவையில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை சீரநாயக்கன்பாளையம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரகாஷ் (28), எஸ்.என்.பாளையம் பாலாஜி காா்டனைச் சோ்ந்த திலோத்தமன் (22), அண்ணா வீதியைச் சோ்ந்த சே.சக்திவேல் (21) ஆகிய மூன்று பேரும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து 3 போ் மீதும் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து ஆா்.எஸ்.புரம் காவல் ஆய்வாளா் மற்றும் தெற்கு சரக காவல் துணை ஆணையா் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் மாநகர காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தா் உத்தரவின்படி 3 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவா்கள் மூவரும் ஏற்கெனவே கோவை மத்திய சிறையில் இருப்பதால் அதற்கான உத்தரவு கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.