ஜெகபர் அலி விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? - அமைச்சர் ரகுபதி
தொட்டில் குழந்தை திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ், தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரா்களின் வயது வரம்பு 42 வயதுக்குள் இருக்க வேண்டும். காலியாக உள்ள காவலா் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ. 4,500 வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவச் சான்று ஆகிய இணைப்புகளுடன், ஜன. 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு த் திட்டம், 2 ஆவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூா் எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 - 275020 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.