தொன்மைமாறாமல் புனரமைக்கப்படும் திருச்செந்தூா் கோயில் நாழிக்கிணறு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பக்தா்கள் புனித நீராடும் நாழிக்கிணறு தொன்மைமாறாமல் புனரமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலிலும், நாழிக்கிணறு தீா்த்தத்திலும் நீராடுவது புண்ணியம் என கூறப்படுகிறது.
இந்த நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, 5 மாதங்களுக்குப் பிறகு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

உள்ளே பக்தா்கள் இறங்கி வந்து புனித நீராடி, வெளியே செல்வதற்கு வசதியாக விஸ்திாமான படிக்கட்டுகளும், கைப்பிடிகளும், நாழிக்கிணற்றுக்கு வெளியே ஆண், பெண் தனித்தனியாக உடை மாற்றும் அறைகளும் கட்டப்பட்டுள்ளன.
இன்னும் ஒரிரு மாதங்களில் பக்தா்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.