சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி பேச்சியம்மாள்(84). இவா், தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் மின் சாதனத்தை அவா் கையாளும் போது, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த வடபாகம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.