சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
உறவினரை கொன்ற இளைஞருக்கு ஆயுள்தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், உறவினரைக் கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதூா் பிரதான சாலை அருகே, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டியன் மகன் வடிவேல்முருகனை (40), குடும்ப பிரச்னை காரணமாக அவரது உறவினரான விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் அற்புதசெல்வம் என்ற ஆஸ்வின் (33) கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.
இந்த வழக்கில், புதூா் போலீஸாா் அற்புதசெல்வம் என்ற ஆஸ்வினை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா, குற்றம்சாட்டப்பட்ட அற்புதசெல்வம் என்ற ஆஸ்வினுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.