கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
தொழிலாளா் நலத் துறையில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை
நாமக்கல் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள உடலுழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இணையம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளா்களை நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கு ஏதுவாக, நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. நாமக்கல் ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலகங்கள், மாவட்ட பதிவாளா் அலுவலகம் எதிரில், ஆயுதப்படை காவல் வளாகம் செல்லும் வழியில் நல்லிபாளையத்தில் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, 04286-280220 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை உறுப்பினா்கள் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறுவதால், அதிகளவில் இணையம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுவோா் பதிவுசெய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.