"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா்அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மேல்மங்கலம், புதுத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியின் மகன் ஆறுமுகம் (42), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மனைவி மற்றும் 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், ஆறுமுகத்துக்கும், அவரின் மனைவி புஷ்பாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, புஷ்பா கீழ்சேவூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால், ஆறுமுகம் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஆறுமுகம் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.