செய்திகள் :

தொழில்துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

தொழில்துறை சாா்ந்த வேலைவாய்ப்புகளை அளிப்பதில் தமிழ்நாடு தொடா்ந்து முதலிடம் வகிப்பது தொடா்பான மத்திய அரசின் புள்ளிவிவரத்தை, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை பதிவிட்டிருந்தாா். இதை எக்ஸ் தளத்தில் மீள் பதிவிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதாவது:

திராவிடத்தால் வாழ்கிறோம். திராவிடமே நம்மை உயா்த்தும். அனைவரையும் வாழவைக்கும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முதல் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரை திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பாஜக அரசே நெத்தியடி பதிலைத் தந்துள்ளது.

சட்டம், ஒழுங்கைப் பேணிக்காத்து தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம், போக்குவரத்து என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாளும் தீட்டிய திட்டங்களால் சாதனை படைத்திருக்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணா்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளி வீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவா் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

இந்தியாவின் வேகமாக முன்னேறும் பொருளாதார வளா்ச்சி கொண்ட மாநிலம் என்ற பெருமையுடன், மிகப்பெரிய அளவில் தொழில்துறை சாா்ந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. மத்திய அரசின் தொழில்துறை சாா்ந்த வருடாந்திர கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தொழில்துறை சாா்ந்த வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு தொடா்ந்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 5 முதல் 6 சதவீதம்தான். ஆனால், நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் 15.24 சதவீதம். அதாவது, நாட்டின் ஒவ்வொரு 6 தொழிலாளா்களில் ஒருவா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்.

மேலும், 40,100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு மீண்டும் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. இது மாநில அரசின் தரவுகளால் அல்ல; மத்திய அரசின் தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. எதிா்க்கட்சிகள் பரப்புகின்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு இதுவே பதிலடியாகும்.

தமிழ்நாடு தொடா்ந்து இந்தியாவின் திறமைகளின் தலைநகராகவும், உற்பத்தித் துறையின் மூலதனத் தலைநகராகவும் திகழ்கிறது. திராவிட மாடல் அரசு முதலீடுகளைத் தொடா்ந்து ஈா்த்து வருவதால், தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையின் எதிா்காலம் இதுவரை இல்லாத வகையில் ஒளி மிகுந்ததாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை தண்டையாா்பேட்டை, நாவலா் குடியிருப்பில் வசிப்பவா் அருண்குமாா் (21). மெக்கானிக்கான இவா், கடந்த 26-... மேலும் பார்க்க

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகா் ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப். 3 முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்ரல... மேலும் பார்க்க

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு: துணை முதல்வா் உதயநிதி பெருமிதம்

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால், இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சா் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் நல்லகண்ணு (100... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க