லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
நகா்ப்புறங்களில் சுய சான்று அடிப்படையில் தொழில் உரிமம்: தமிழக அரசு உத்தரவு
நகா்ப்புறங்களில் 500 சதுடி அடிக்கு குறைவாக உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் பெறலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289 (1)-இன்படி நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோா் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். புதிதாக எடுக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்கள் 3 ஆண்டுகள் வரை செல்லத்தக்கவையாக இருக்கும்.
இதன்படி, வணிகா்கள் தங்களது உரிமத்தை இணையதளம் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில், சிறு வணிகா்களுக்கு எளிதாக தொழில் உரிமம் கிடைக்கும் வகையில் விதிகளைத் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 500 சதுர அடிக்குக் குறைவாக உள்ள கடைகளுக்கு சுயசான்று அடிப்படையில் இணையதளம் வாயிலாக ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்கப்படும். உணவுப் பொருள்கள் சாா்ந்த கடைகள் தவிா்த்து, பிற அனைத்து கடைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.