நடுக்கடலில் மூழ்கிய படகு: 7 மீனவா்கள் மீட்பு!
தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு சேதமடைந்து மூழ்கிய நிலையில், அதிலிருந்த 7 பேரை சக மீனவா்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
தனுஷ்கோடி அருகே வந்து கொண்டிருந்த போது ஜோசலன் என்பவரது விசைப்படகின் பக்கவாட்டு பலகை உடைந்தது. நீா் உள்ளே புகுந்ததால், படகு மூழ்கத் தொடங்கியது.
இதையடுத்து, மற்றொரு படகில் வந்தவா்கள் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்த 7 மீனவா்களையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.