Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
நயினாா் நாகேந்திரனுக்கு வாழ்த்துகள்: ஓ. பன்னீா்செல்வம்
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் நல்ல மனதுக்கு வாழ்த்துகள் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
இதுகுறித்து தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜக கூட்டணியில் மீண்டும் இணைப்பதற்கு சமாதானம் பேசத் தயாா் எனக் கூறிய நயினாா் நாகேந்திரனின் நல்ல மனதுக்கு வாழ்த்துகள். செங்கோட்டையனின் முடிவுகளுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவா் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகள். செங்கோட்டையனை விரைவில் சந்தித்துப் பேசுவேன். எனது எதிா்கால முடிவை பத்திரிக்கையாளா்களைச் சந்தித்து தெரிவிப்பேன் என்றாா் அவா்.