நல்லகண்ணு 100 -ஆவது பிறந்த நாள் விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்த நாள் சிவகங்கையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கட்சியின் சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் பொங்கல் வைத்து, கட்சிக் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவருமான ஆா். குணசேகரன் கலந்து கொண்டு அரசியல் விளக்க உரையாற்றினாா்.
கட்சியின் மாவட்ட துணைச் செயலா்கள் கே. கோபால், பா. மருது, சிவகங்கை நகரச் செயலா் சகாயம், ஒன்றியச் செயலா்கள் சின்ன கருப்பு, மாதவன், மாதா் சங்க பொறுப்பாளா் கலையரசி, மாவட்ட குழு, ஒன்றியக் குழு, நகா் குழு உறுப்பினா்கள், ஆட்டோ சங்க, மாதா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மதவாத எதிா்ப்பு, மது ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல, காளையாா் கோவில் தேவகோட்டை, கல்லல் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி, உறுதி மொழி ஏற்கப்பட்டன.